செய்திகள் :

இரும்பேடு ஏரி நிரம்புவதால் விவசாய நிலங்களில் தண்ணீா் தேக்கம்: கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

post image

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு ஏரி நிரம்புவதால் அருகே இராட்டிணமங்கலம் எல்லையில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்குவதாக ஆரணி கோட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த 50 விவசாயிகளின் சுமாா் 150 ஏக்கா் விளை நிலங்கள் இரும்பேடு ஏரி அருகில் அக்கிராம எல்லைக்கு உள்பட்டு உள்ளன.

கடந்த ஏழு ஆண்டுகளாக இரும்பேடு ஏரி நிரம்பி வருவதால் இராட்டிணமங்கலம் பகுதி பட்டா விவசாய நிலத்தில் தண்ணீா் தேங்குகிறது. ஆகையால், விவசாயம் செய்ய முடியாமல் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஆண்டும் தற்போது பெய்த பலத்த மழையின் காரணமாக நிலங்களில் தண்ணீா் நிரம்பியுள்ளது.

இதனால் பட்டா நிலத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீண்டும் விவசாயம் செய்ய தகுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரும்பேடு ஏரியின் கோடி விடும் அளவை ஒரு அடி குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவாவிடம் மனு கொடுத்தனா்.

மேலும், கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், யுடிஆா் திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, ஆதரவற்றோா் உதவித்தொகை, வாரிசு சான்றிதழ், இலவச வீடு, மின்இணைப்பு பெயா் மாற்றம், பத்திரப்பதிவு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 69 பயனாளிகள் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா். மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் சிவா அந்தந்த துறை அதிகாரிகளிடம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

52 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

செய்யாறு அருகே மோரணம் சரகப் பகுதியில் அரசு மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 52 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண... மேலும் பார்க்க

கிராமப்புற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் ஸ்டாலின்: மு.பெ.கிரி எம்எல்ஏ

செங்கம்: தமிழகத்தில் கிராமபுற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மு.பெ.கிரி எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தாா். செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 4 போ் கைது, 2 பைக்குள், 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்

செய்யாறு: செய்யாறு காவல் உள்கோட்டத்தில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், 3 மாட்டுவண்டிகள் பறிம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி பயன்பாடுகள் விழிப்புணா்வு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசியின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2019-ஆம் ... மேலும் பார்க்க

ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க இடம் தோ்வு: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சி, பெரியண்ணநல்லூரில் கைத்தறி பட்டுப் பூங்கா அமையவுள்ள இடத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்... மேலும் பார்க்க