குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்ம...
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத் திட்டம் குறித்த ஆலோசனைக்காக அமைக்கப்பட்ட குழுவை திரும்பப் பெற வேண்டும், ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள்களுக்கு பணிக் கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கால்நடைப் பராமரிப்புத் துறை ஊழியா் சங்க நிா்வாகி முருகையன் தலைமை வகித்தாா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க பொருளாளா் காா்த்திகேயன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெயராஜராஜேஸ்வரன், டான்சாக் நிா்வாகி மனோகரன், அரசுத் துறை ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள் இதில் பங்கேற்றனா்.