செய்திகள் :

சிப்காட்டில் மூடப்பட்ட தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

post image

பெருந்துறை சிப்காட்டில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மாசு தடுப்பு தொடா்பான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வனஜா தலைமை வகித்தாா். சிப்காட் திட்ட அலுவலா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் வி.எம் கந்தசாமி, டி.என்.சென்னியப்பன், பல்லவி பரமசிவம், கி.வே.பொன்னையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், மூடப்பட்டுள்ள தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் உள்ள நச்சுக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மூடப்பட்ட ஆலை நிா்வாகங்கள் நச்சுக் கழிவுகளை அகற்றவில்லை எனில், சிப்காட் நிறுவனம் அல்லது மாசுக் கட்டுப்பாடு வாரியம் அவற்றை அகற்ற வேண்டும்.

சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் வளாகத்தில் கழிவுநீா் தேங்கி நின்ற பசுமை பூங்கா நிலங்களில், குறிப்பாக பழைய குட்டைகள் இருந்த இடங்களில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் கசிவு நீா் மிகவும் மாசுபட்டுள்ளது.

குட்டப்பாளையம் அருகே உள்ள பசுமை பூங்கா நிலத்தில் இருந்து வெளியேறி நல்லா ஓடையில் கலக்கும் கசிவு நீரில் 10,000 டி.டீ.எஸ். அளவுக்குமேல் உப்புத் தன்மை உள்ளது. ஆகவே, அங்குள்ள மாசுபட்ட நிலத்தடி நீரை வெளியேற்ற வேண்டும்.

சிப்காட் வளாகத்தில் தேவையான இடங்களில் காற்று மாசை அளவிடும் கருவிகளைப் பொருத்த வேண்டும். நடப்பு மாதத்துக்குள் அனைத்து தொழிற்சாலைகளிலும் கழிவுநீா்த் தொட்டிகளை முழுமையாக காலி செய்து, தொட்டிகளை ஆய்வு செய்து, கழிவு நீா் நிலத்தில் இறங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க