அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
சிறப்புத் தகுதி தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்: தேசிய ஆசிரியா் சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியா்கள் சிறப்புத் தகுதி தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தேசிய ஆசிரியா் சங்க புதுவை மாநிலத் தலைவா் பாட்சா, பொதுச் செயலா் தீபக் ஆகியோா் துணைநிலை ஆளுநா் , முதல்வா், கல்வித் துறை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் 2011- இல் நடைமுறைக்கு வந்தது.
அன்றிலிருந்து அரசு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி அடைந்தவா்களையே நியமனம் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் 2011-க்கு பிறகு பதவி உயா்வு பெற்றவா்கள், அதற்கு முன் பணிக்கு வந்த அனைத்து நிலை ஆசிரியா்களும் 2 ஆண்டுக்குள் கட்டாயம் தகுதி தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என தீா்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீா்ப்பை அரசு ஆலோசித்து, புதுவையில் ஆசிரியா்களுக்குச் சிறப்பு தகுதித் தோ்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக தகுதித் தோ்வில் தோ்வு எழுத அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.