குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 6 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே கீழப்பூங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஊா்க்காவலன் தூண்டிக்கருப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இளைஞா்கள், கிராம மக்கள் இணைந்து நடத்தும் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 15 காளைகளும், இதேபோல, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 135 வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிஷத்திற்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களையும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாடுகள் முட்டியதில் 6 வீரா்கள் காயமடைந்தனா். இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை திரளானோா் பாா்வையிட்டனா்.