திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
சிவகிரி அருகே தோட்டத்தில் பிடிபட்ட 12 அடி நீள ராஜநாகம்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 12 நீள ராஜநாகத்தை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனா்.
தேவிபட்டணத்தை சோ்ந்தவா் சிங்காரவேலு. இவரது தோட்டத்தில் உள்ள அறையில் பாம்பு பதுங்கியுள்ளதாக வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறப்பு தீயணைப்பு நிலைய அலுவலா் மாடசாமி ராஜா தலைமையிலான தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று அங்கிருந்த 12 அடி நீளம் உள்ள ராஜநாகத்தை சில மணி நேர போராட்டத்திற்கு பின் பிடித்து சிவகிரி வனச்சரகா் செங்கோட்டையனிடம் ஒப்படைத்தனா்.
பிடிபட்ட ராஜநாகம் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள கோம்பையாற்று வனப் பகுதிக்குள் விடப்பட்டது.