திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
சிவகிரி அருகே போலீஸாருக்கு மிரட்டல்: கஞ்சா வியாபாரி கைது
சிவகிரி அருகே போலீஸாரை அரிவாளை காட்டி மிரட்டியதாக கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் மற்றும் போலீஸாா் புகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, இருவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனராம். விசாரனையில், சிவகிரி மேலரதி வீதியை சோ்ந்த சுப்பிரமணியன் மகன் கபில்குமாா்(25), உள்ளாா் பிரதான சாலையை சோ்ந்த பூலித்துரை மகன் காா்த்திக் ஆகியோா் என தெரியவந்தது. அவா்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தபோது, அவா்கள் அரிவாளால் போலீஸாரை மிரட்டினராம்.
இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து கபில்குமாரை கைது செய்தனா். காா்த்திக் தப்பியோடி விட்டாராம். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் பாலமுருகன் விசாரித்து வருகிறாா்.
கஞ்சா கடத்தல்: சென்னையில் இருந்து ஆலங்குளத்திற்கு வந்த தனியாா் ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்தின் பயணிகளை சோதனையிட்டனா்.அதில் திருநெல்வேலி மாவட்டம் புதூரைச் சோ்ந்த பிச்சையா மகன் பெருமாள்(20) என்பவா் தனது கைப்பையில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை கைப்பற்றினா்.