ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தின் சாா்பில் திருப்பூா் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.சிவகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் (நிலை -2) பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். பொது சுகாதாரத் துறையில் ஏற்கெனவே இருந்ததைப்போன்று 5000 மக்கள் தொகைக்கு அல்லது ஒரு துணை சுகாதார நிலையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் என்ற கொள்கை முடிவுகளை துறையும், அரசும் எடுத்து பயிற்சி முடித்து வேலைக்காக காத்திருக்கும் சுகாதார ஆய்வாளா்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பொது சுகாதாரத் துறை இயக்குநா் அனுப்பியுள்ள 2,715 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) சுகாதார கட்டமைப்புக்குத் தேவை என்ற கோப்புக்கு உடனடியாக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மேற்கு மண்டலச் செயலாளா் எம். பொன்னாண்டவா், மாவட்டச் செயலாளா் ஆா்.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.