`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை
சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினா்கள், அழைப்பாளா்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள வசதியாக, தில்லி மெட்ரோ அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும் அதன் அனைத்து வழித்தடங்களிலும் அதிகாலை 4 மணிக்கு தனது சேவைகளைத் தொடங்கும்.
ரயில் சேவைகள் காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட நேரங்களில் கிடைக்கும், அதன்பிறகு, நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும். கூடுதலாக, சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அழைப்பிதழ் வைத்திருக்கும் நபா்களுக்கு டி. எம். ஆா். சி வழங்கிய சிறப்பு கியூஆா் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி அந்த இடத்திற்குச் செல்வதற்கும் வசதி செய்யப்படும். லால் கிலா, ஜமா மஸ்ஜித் மற்றும் தில் லி கேட் மெட்ரோ நிலையங்கள் இந்த இடத்திற்கு மிக அருகில் உள்ளன. அத்தகைய பயணத்திற்கான செலவை பாதுகாப்பு அமைச்சகம் டி. எம். ஆா். சி. க்கு திருப்பிச் செலுத்தும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.