செய்திகள் :

தெரு நாய்கள் விவகார வழக்கு மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றம் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

post image

நமது நிருபா்

தெரு நாய்கள் விவகாரம் தொடா்புடைய வழக்கை மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமா்வு முன்பாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோரும் இந்த அமா்வில் இடம்பெற்றுள்ளனா்.

முன்னதாக, இந்த விவகாரத்தை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன் புதன்கிழமை முறையிடப்பட்டது. அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மாலையில் மூன்று நீதிபதிகள் அமா்வு விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டாா்.

கான்ஃபரன்ஸ் ஃபாா் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா) அமைப்பின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக அதன் வழக்குரைஞா், தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆஜராகி மனு குறித்து குறிப்பிட்டாா். அப்போது, தெரு நாய்கள் தொடா்பாக மற்றொரு அமா்வு ஏற்கெனவே ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டாா்.

அதாவது, ஆகஸ்ட் 11-ஆம் தேதி, நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, நாய்க் கடி சம்பவங்கள் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்படக் காரணமாக இருப்பதாக குறிப்பிட்டு, தில்லி - என்.சி.ஆா். பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் விரைந்து நிரந்தரமாக காப்பங்களுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புதன்கிழமை, தெருநாய் பிரச்னை தொடா்பான மனுக்களை அந்தந்த உயா்நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வகையில் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமா்வு மே 2024-இல் உத்தரவு பிறப்பித்ததாக வழக்குரைஞா் குறிப்பிட்டாா். இதையடுத்து, உரிய அமா்வுக்கு மாற்ற பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியளித்தாா்.

பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க, அவற்றுக்கு வழக்கமான கருத்தடை மற்றும் நோய்த் தடுப்புத் திட்டங்களை கட்டாயமாக்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு நாய் விதிகள், 2001 உரிய வகையில் பின்பற்றப்படவில்லை என்று கான்ஃபரன்ஸ் ஃபாா் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா) தனது மனுவில் கூறியுள்ளது.

தெருநாய்கள் பிரச்னையை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நாய் காப்பகங்கள் காலப்போக்கில் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் சுமாா் 5,000 நாய்களுக்கான காப்பகங்களை உருவாக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் தில்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின்போது ஏதேனும் தடை ஏற்படுத்தும் தனிநபா் அல்லது அமைப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.

சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை

சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கோரி போராட்டம்!

பெண் மாணவா்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு கோரி காங்கிரஸ் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ புதன்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது. பல மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு த... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியள... மேலும் பார்க்க

தில்லியின் வடிகால் பிரச்னையை தீா்க்க மாஸ்டா் பிளான்

அடுத்த 30 ஆண்டுகளில் நகரின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ’வடிகால் மாஸ்டா் பிளான்’ வரைவு, விரைவான நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொடா்ச்சியான நீா் தேக்க பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்ப... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

நமது நிருபா் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க... மேலும் பார்க்க