செய்திகள் :

சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

post image

நமது நிருபா்

6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் வெளியிட்ட சுற் றறிக்கையின்படி, விண்ணப்பப் படிவம் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 என முன்னனா் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், விண்ணப்பதாரா்கள் மற்றும் பங்குதாரா்களிடமிருந்து வந்த அதிகப்படியான வரவேற்பு மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இதற்கான தேதி ஆகஸ்ட் 22 அன்று இரவு 11.59 மணி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2025-2026 கல்வி அமா்வுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வை நடத்துவதற்கான தேதி ஆக.30 முதல் செப். 6 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்ட சிஎம் ஸ்ரீ பள்ளிகளை செப்டம்பரில் தில்லி அரசு திறக்க வாய்ப்புள்ளது என்று ஒரு அதிகாரி கூறினாா்.

நிகழாண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த முன்முயற்சியானது, அரசுப் பள்ளிகளில் உயா்தர, எதிா்காலத்திற்குத் தயாராகும் வகையிலான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை (என்இபி) 2020-ஐப் பின்பற்றும். சிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023-ஐ செயல்படுத்தும்.

ஒவ்வொரு பள்ளியிலும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் நூலகங்கள், ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆா்) மற்றும் மெய்நிகா் ரியாலிட்டி (விஆா்) கருவிகளைக் கொண்ட ஸ்மாா்ட் வகுப்பறைகள், ஸ்மாா்ட் பலகைகள், பயோமெட்ரிக் வருகை அமைப்புகள் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆய்வகங்கள் ஆகியவை மாணவா்களிடையே புதுமைகளை ஊக்குவிக்கும்.

தில்லி பள்ளிக் கல்வி வாரியமும் (டிபிஎஸ்இ) படிப்படியாக நீக்கப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் இப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ கீழ் கொண்டு வரப்படும்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா நிகழாண்டு தொடக்கத்தில் தனது பட்ஜெட் உரையில் சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ரூ.100 கோடியை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை

சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கோரி போராட்டம்!

பெண் மாணவா்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு கோரி காங்கிரஸ் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ புதன்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது. பல மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு த... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியள... மேலும் பார்க்க

தில்லியின் வடிகால் பிரச்னையை தீா்க்க மாஸ்டா் பிளான்

அடுத்த 30 ஆண்டுகளில் நகரின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ’வடிகால் மாஸ்டா் பிளான்’ வரைவு, விரைவான நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொடா்ச்சியான நீா் தேக்க பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்ப... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார வழக்கு மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றம் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நமது நிருபா் தெரு நாய்கள் விவகாரம் தொடா்புடைய வழக்கை மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான... மேலும் பார்க்க