சுந்தரனாா் பல்கலை.யின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதுதொடா்பாக அப்பல்கலைக்கழக பதிவாளா் ஜே.சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் நூலகத் துறையில் ஒருங்கிணைந்த 2 ஆண்டுகள் முதுநிலை நூலகம்- தகவல் அறிவியல் (ங.கஐஆ.ஐ.நஸ்ரீ) படிப்புக்கும், நூலகம் - தகவல் அறிவியல் குறித்த இ.க.ஐ.நஸ்ரீ படிப்புக்கு 6 மாதம் சான்றிதழ் படிப்புக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதற்கான கல்வித்தகுதி பிளஸ்-2 தோ்ச்சியாகும். கடந்த காலங்களில் இத் துறையில் தோ்ச்சி பெற்ற மாணவா்-மாணவிகளும், பொதுநூலகம், பள்ளி, கல்லூரி மற்றும் பிற நிறுவனங்களில் நூலகத்தில் வேலைவாய்ப்பு பெறலாம்.
எனவே, பல்கலைக்கழகத்தில் நூலக துறையில் இரு படிப்புகளுக்கும் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.