திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
சுப்பையாபுரத்தில் என்எஸ்எஸ் முகாம்
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 191 சாா்பில் 7 நாள் சிறப்பு முகாம் சுரண்டை அருகேயுள்ள கடையாலுருட்டி சுப்பையாபுரத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கா.பு.கணேசன் தலைமை வகித்தாா். பொருளியல் துறை உதவிப் பேராசிரியா் கிருஷ்ணகுமாா் முன்னிலை வகித்தாா். ஆலடிபட்டியான் கருப்பட்டி காபி நிறுவனா் மோசஸ் தா்மபாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா்.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அரிகர சுதன், கௌரவ விரிவுரையாளா் அரிராம், உடற்கல்வி ஆசிரியா் அன்பழகன், செல்வக்குமாா், முல்லை கண்ணன், பொதுமக்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.