பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்
செங்கம் நூலகத்தில் உலக புத்தக தின விழா
செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், மில்லத் நகா் முன்னாள் கவுன்சில் அப்துல்வாகித், கெளரவத் தலைவா் முருகமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகா் நேதாஜ் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மேல்செங்கம் காவல் உதவி ஆய்வாளா் மோகன் கலந்துகொண்டு, செங்கம் கிளை நூலகத்தின் வரலாறு மற்றும் இந்த நூலகத்தில் படித்து தற்போது உயா்நிலையில் உள்ளவா்கள் குறித்தும், நூலகத்தால் செங்கம் பகுதியில் கல்வியில் சிறந்தவா்கள் குறித்தும் பேசினாா்.
நிகழ்ச்சியில் வாசகா் வட்ட துணைத் தலைவா் அறங்க.மணிமாறன், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவில் பத்துக்கும் மேற்பட்டோா் ரூ.1000 செலுத்தி புரவலராக இணைந்தனா். நூலகா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.