சிசுவின் பாலினம் தெரிவித்தால் குண்டா் தடுப்புச் சட்டம் பாயும்
சென்னையில் அடுத்தடுத்து நகைப்பறிப்பு: விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?
சென்னை: உத்தரப்பிரதேசத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்து பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பில் ஈடுபட்டுவிட்டு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் மீண்டும் விமானத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் வடமாநிலக் கொள்ளையர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரத்தில் பொங்கலன்று பல்வேறு இடங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டுவிட்டு விமானத்தில் தப்பிய உ.பி. கொள்ளையர்கள்தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய பாணியிலேயே தற்போதும் அடையாறு காவல் எல்லைக்கு உள்பட்டப் பகுதிகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்டுவிட்டு விமானத்தில் தப்பிச் செல்வார்கள் என்று காவல்துறையினர் மிகச் சரியாக கணித்ததால், சென்னை விமான நிலையத்துக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முந்தைய விசாரணையில் கிடைத்த தகவலால் விமான நிலையத்தை கண்காணித்த காவல்துறையினருக்கு கைமேல் பலன் கிடைத்தது. மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில இன்று தப்பிச் செல்ல முற்படும்போது கைது செய்துள்ள காவல்துறை.
அடையாறு காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று எட்டு இடங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் சினிமா பாணயில் விமானத்துக்குள் புகுந்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்திருக்கிறார்கள். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கைதான இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது, முதலில், கைதான இருவரும் பெயரை மற்றி மாற்றி கூறியதால் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
தங்க நகை விலை உயர்ந்துவிட்டதால், நகைப் பறிப்பால் நிறைய பணம் கிடைப்பதால் விமானத்தில் பயணித்து கொள்ளையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த கொள்ளையர்கள். சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் எட்டு இடங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டு 30 சவரனுக்கும் மேல் தங்க நகைகளைப் பறித்துள்ளனர். ஒரு சவரன் தங்கம் ரூ.65 ஆயிரத்தை எட்டியுள்ள நலையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஒரு மணி நேரத்தில் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோதுதான் வசமாகச் சிக்கியிருக்கிறார்கள்.
ஒரு மணி நேர கொள்ளையில் பல லட்சம் வருவதால், விமானத்தில் சென்று நகைப் பறிப்பில் ஈடுபடுவதும், பணத்தைப் பற்றி கவலைப்படாமல் விமான டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டு வந்து கொள்ளையடித்துவிட்டு உடனடியாக ஊர் திரும்பிவந்ததும் தெரிய வந்தது. இவர்கள் இதுபோல வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களுக்கும் சென்று வந்துள்ளனரா, இவர்கள் இருவர் மட்டும்தானா, பெரிய கொள்ளை கும்பல் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.