GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்...
செப். 5, 6இல் திருச்செங்கோட்டில் மாவட்ட அளவிலான தடகள போட்டி
நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான தடகள் போட்டிகள் செப். 5, 6 இல் திருச்செங்கோடு கேஎஸ்ஆா் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட தடகள சங்கத் தலைவா் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
14 , 16, 18 மற்றும் 20 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இளையோா் தடகள போட்டிகள் இம்மாதம் 5, 6 (வெள்ளி, சனி) ஆகிய நாள்களில் திருச்செங்கோடு கேஎஸ்ஆா் கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ளவா்கள் நேரடியாக வியாழக்கிழமை (செப். 4) மாலை 3 மணி முதல் கேஎஸ்ஆா் கல்லூரியில் தங்களுடைய பங்கேற்பை உறுதி செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 9443777190 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.