2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
செல்வ நாராயணா் கோயிலில் ஆவணித் திருவிழா
செல்லப்பிள்ளையாா்குளம் செல்வ நாராயணா் கோயிலில் 14ஆம் ஆண்டு ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, நாள்தோறும் அய்யாவுக்கு மூன்று வேளை பால் தா்மம் நடைபெறும். எட்டாம் திருநாளான ஆக. 29 வெள்ளிக்கிழமை கோயிலில் அன்ன தா்மம், சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.
ஒன்பதாம் திருநாளான ஆக. 30 சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீராமபிரான் குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி மக்களுக்கு அருள்பாலிக்கிறாா். பத்தாம் திருநாளான ஆக. 31மதியம் 3 மணிக்கு செண்டை மேளம் முழங்க முருகப் பெருமானின் காவடியாட்டம் நடைபெறும்.
செப். 1 அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா பக்தா்களுக்குக் காட்சியளிக்கிறாா். மதியம் 2 மணிக்கு அனுமன் ஆட்டம் நடைபெறுகிறது.