சேரன்மகாதேவி அருகே 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ஞாயிற்றுக்கிழமை, சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.
சேரன்மகாதேவி, புலவன்குடியிருப்பு, பூதத்தான்குடியிருப்பு, கரிசல்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில், கரிசல்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கோழிப் பண்ணையின் மேற்கூரை சரிந்து விழுந்ததாம். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. மேலும், ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்களும் சேதமடைந்தன.
கனமழையால் அப்பகுதியில் பல இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளுக்கு கவலை தெரிவித்தனா்.