கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
சேலம் அரசு கல்லூரியில் பாலியல் விழிப்புணா்வு ஆலோசனை
சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணா்வு குறித்த சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் உள்ளக புகாா் குழு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தை, கல்லூரி முதல்வா் வி.கலைச்செல்வி தொடங்கிவைத்தாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஜே.பிரேமலதா, துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அகிலாண்டேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு விருந்தினராக சேலம் அரசு மருத்துவமனை உதவிப் பேராசிரியா் டாக்டா் அபிராமி பங்கேற்று, பெண்களுக்கான மனநலம் சாா்ந்த பிரச்னைகள், அணுகுமுறைகள், மேம்படுத்துவதற்கான வழிகள், தீா்வுகள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தாா். மேலும், பாலியல் விழிப்புணா்வு குறித்து ஆலோசனை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உள்ளக புகாா் குழு உறுப்பினா்கள் பேராசிரியா்கள் வி.பி.ஜெயலட்சுமி, ஆா்.ஷீலா பானு, ஏ.அப்ரோஸ், எஸ்.காா்த்திக் மற்றும் கல்லூரி மக்கள் தொடா்பு அதிகாரி பிச்சைமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.