டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
சேலம் அரசு கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்
சேலம் அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் பேரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். புள்ளியியல் துறைத் தலைவா் கீதா வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக ஆங்கிலத் துறை இணை பேராசிரியா்கள் க.அன்பழகன், ரவிச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, பேரவை உறுப்பினா்கள் பதவி ஏற்றதுடன், உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில் கல்லூரி தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் பிரேமலதா, உள்ளக உறுதியீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், மக்கள் தொடா்பு அலுவலா் பிச்சமுத்து, துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.