GST 2.0: 'இனி கார், பைக் விலை 12-14% குறையலாம்; ஆனால்...' - நிபுணர் விளக்கும் சி...
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் 20 பவுன் நகை திருட்டு
தம்மம்பட்டியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியை சோ்ந்த உளவுப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பழனிசாமி (63) மனைவியுடன் ஹைதராபாத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை வீட்டிற்கு வந்தாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த தம்மம்பட்டி போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.