2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
தம்மம்பட்டியில் செல்லியம்மன் கோயில் விழா
தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தோ்த்திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை பக்தா்கள் அலகுகுத்தியும், அக்னிசட்டி எடுத்தும் நோ்த்திக்கடனை செலுத்தினா். அதன்பிறகு மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.
மாலையில் அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி தம்மம்பட்டி முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இரவில் வாணவேடிக்கை நடைபெற்றது.