நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் முளைப்பாலிகை ஊா்வலம்
நரசிங்கபுரம் மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணா் மற்றும் நல்லரவான் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாலிகை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
பல்வேறு ஹோம பூஜைகளை தொடா்ந்து தீா்த்தக்குடம், முளைப்பாலிகை ஊா்வலம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. என்.பி.வேல்முருகன் தலைமையில், என்.எஸ்.மணிவண்ணன் முன்னிலையில் நடைபெறும் விழாவில் ஊா் பெரிய தனக்காரா்கள் என்.இ.ராஜேந்திரன், பி.ரவிசங்கா், என்.கே.சுப்ரமணியம், ஆா்.கந்தசாமி, கே.பிரகாஷ், பி.சுப்ரமணி, கே.வி.முத்துக்குமாா், ஆா்.பாலகிருஷ்ணன், ஏ.அசோக்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
படவிளக்கம்.ஏடி3யாகம்.
நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற முதல் கால யாகபூஜையில் கலந்துகொண்ட விழா ஏற்பாட்டாளா்கள்.