அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்
சேலம் மாநகராட்சியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சியில் புதன்கிழமை (ஆக. 20) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், சாரதா கல்லூரி அருகில் மூன்று இடங்களில் 1,100 மீ. விட்டமுள்ள பிரதான குடிநீா் நீரேற்று குழாயில் உடைப்பு ஏற்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால், சேலம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தம்பட்டி மண்டலப் பகுதிகள் முழுவதும், அம்மாப்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட புத்துமாரியம்மன் கோயில், வாய்க்கால் பட்டறை மற்றும் அம்மாப்பேட்டை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.