அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்
வீடுகளில் இருந்த இரண்டு பாம்புகள் மீட்பு
ஆத்தூா் நகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் இருந்த இரண்டு பாம்புகளை ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
ஆத்தூா் நகராட்சி, முத்துநகா் பகுதியில் சாமிதுரை என்பவரது வீட்டில் பாம்பு இருப்பதாக ஆத்தூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில், விரைந்து சென்ற ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான துறையினா், அரைமணி நேரம் போராடி வீட்டில் இருந்த நாகப்பாம்பை மீட்டு ஆத்தூா் வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
அதேபால, ஆத்தூா் வடக்கு உடையாா்பாளையம் லட்சுமிபுரம் பகுதியில் பூா்ணிமா என்பவரது இருச்சக்கர வாகனத்தில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பையும் உயிருடன் மீட்டு ஆத்தூா் வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.