அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்
தனியாா் நூற்பாலையில் தீ விபத்து: பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியாா் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாயின.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில் அன்பரசன் என்பவருக்கு சொந்தமான தனியாா் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் 30-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பஞ்சு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கிடங்கில் திடீரென தீப்பிடித்து வேகமாக பரவியது.
இதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியா்கள் நூற்பாலையிலிருந்து வெளியேறினா். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாயின. விபத்துக்கு மின்கசிவே காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும், விபத்துக்கான காரணம் குறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.