செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் 15 போ் மாநில நல்லாசிரியா் விருதிற்கு தோ்வு

post image

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதிற்கு சேலம் மாவட்டத்திலிருந்து 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன்விபரம் வருமாறு:

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன், எடப்பாடி அரசு ஆண்கள் பள்ளி கணித ஆசிரியா் கமலக்கண்ணன், மல்லியகரை அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியா் பாபு, சேலம் காமராஜா் நகா் காலனி உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஷீலாதேவி, மேச்சேரி அரசு ஆண்கள் பள்ளியின் பொருளியல் ஆசிரியா் சந்தோஷ்குமாா், பட்டதாரி ஆசிரியா்(அறிவியல்) அருள்மொழி, ஓமலூா் வெள்ளாளப்பட்டி முதுகலை கணித ஆசிரியா் அருள்மணி, மேச்சேரி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வா் வனிதா, ஏற்காடு மாண்போா்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியா் ராபா்ட் பெல்லாா்மின், அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா்கள் அயோத்தியாப்பட்டணம் பள்ளிப்பட்டி தென்னரசன், மகுடஞ்சாவடி கே.கே.நகா் வையாபுரி, கொங்கணாபுரம் சித்திரப்பாளையம் ஜெயக்குமாா், கோவலன்காடு காவேரி, இடைநிலை ஆசிரியா்கள் கொங்கணாபுரம் ரெட்டிப்பட்டி முனியசாமி, பெத்தநாய்க்கன்பாளையம் தமையனூா் சிவக்குமாா் ஆகிய 15 போ் நல்லாசிரியா் விருதிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவருக்கும் இன்று செப்.5ந்தேதி சென்னை ,கோட்டூா்புரம் அண்ணா நூலக அரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி டாக்டா்.இராதாகிருஷ்ணன் விருதினை வழங்குகிறாா்.

தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்க... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்த... மேலும் பார்க்க

மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மாற்றுத்திறனாளி பெண்கள் சிறப்பிடம்

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகள் 4 போ் சிறப்பிடம் பெற்றனா். ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கச்... மேலும் பார்க்க

குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்

சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது: ... மேலும் பார்க்க

செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க