செய்திகள் :

சேலம்: வவ்வால்களை வேட்டையாடி, சில்லி சிக்கன் என விற்பனை; இருவர் கைது; விசாரணையில் பகீர் தகவல்

post image

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள டேனிஷ்பேட்டை வனத்திற்கு உட்பட்ட தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்பதாக டேனிஷ்பேட்டை வன அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனக் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வனத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக, அங்குச் சென்ற அதிகாரிகள், வேட்டையில் ஈடுபட்ட 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வவ்வால் வேட்டையில் ஈடுபட்டது டேனிஸ்பேட்டையைச் சேர்ந்த கமல் மற்றும் செல்வம் என்பதும், இவர்கள் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, சுத்தம் செய்து சமைத்து, மாலை நேரச் சிற்றுண்டியாக சில்லி சிக்கன் எனப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படித்தி சிறையில் அடைத்தனர்.

வனத்துறையினர் விசாரணை
வனத்துறையினர் விசாரணை

குறிப்பாக, இவர்கள் வேட்டையாடிய பழந்தின்னி வவ்வால்கள் தனித்துவமானவை. பழங்களையும், பூக்களிலிருந்து தேனையும், சிறிய பூச்சிகளை மட்டுமே உணவாக அருந்தக்கூடிய வவ்வால்கள் இவை. இந்த வகை வவ்வால்கள் மனிதர்கள் உணவாகச் சாப்பிடக் கூடாத உயிர்களில் ஒன்றாகும்.

ஏற்கனவே, நிபா வைரஸ், கொரோனா வைரஸ் உள்ளிட்டவை வவ்வால்கள் மூலம் பரவியதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், வவ்வால்களைப் பிடித்து சில்லி சிக்கன் எனக் கூறி பொதுமக்களுக்கு விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Telangana: விபத்தில் உயிரிழந்த மகள்; வரதட்சணையை திரும்ப கேட்டு உறவினர்கள் போராட்டம்

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணப்பூர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லாவண்யா (29) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ் நிலக்கரி சுரங்கத்தில் வேல... மேலும் பார்க்க

`என் அக்காவுடன் பழகியது பிடிக்காததால் கொலை செய்தேன்’ - நெல்லை ஐ.டி ஊழியர் கொலை பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். 28 வயது இளைஞரான அவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் நோயால் அவத... மேலும் பார்க்க

போலி தூதரக ஜெயின் தில்லு முல்லு அம்பலம்: 162 வெளிநாட்டு பயணம், ரூ.300 கோடி மோசடி, 25 போலி கம்பெனி..

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கடந்த வாரம் வெஸ்ட்ஆர்டிகா நாட்டின் பெயரில் போலி தூதரகம் நடத்தியது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 கார்கள், போலி வெஸ்ட்ஆர்ட... மேலும் பார்க்க

Sister Hong: 1600 -க்கும் மேற்பட்ட ஆண்கள்; பாலியல் வீடியோவை விற்ற நபர் கைது - தொடரும் சிக்கல்

சீனாவின் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'சிஸ்டர் ஹாங்' விவகாரம். இந்த விவகாரம் வெளியானதிலிருந்து விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.சிஸ்... மேலும் பார்க்க

தேனியில் மணல் திருட்டு விவகாரம் - புகார் கொடுக்கும் உரிமை யாருக்கு? - குழப்பத்தில் அதிகாரிகள்

தேனி கொடுவிலார்பட்டி பாண்டியராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் தேனி தாசில்தார் சதீஷ்குமார் ... மேலும் பார்க்க

பீகார்: ஊர்க்காவல் படை தேர்வில் மயக்கமடைந்த பெண்; ஆம்புலன்ஸில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள போதிகயா என்ற இடத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்பட்டத... மேலும் பார்க்க