மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சேவல் சண்டை: 4 போ் கைது
திருப்பூரில் சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அங்கேரிப்பாளையம் பகுதியில் உள்ள குப்பையன்காடு என்ற இடத்தில் சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபா்களைப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த முருகானந்தம்(56), ஜான் உசேன்(40), நிதின் சக்தி (18), ஜெய்வந்த் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த சேவல்களை பறிமுதல் செய்தனா்.