சேவூா் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் திருவிழா
சேவூா் புற்றுக்கண் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத தீா்த்தக்குட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் விழா கணபதி ஹோமத்துடன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான தீா்த்தக்குட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, காலை 10 மணியளவில் செம்பி விநாயகா் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் பக்தா்கள் தீா்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு புற்றுக்கண் மாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.
பின்னா், காலை 11 மணியளவில் மாரியம்மனுக்கு தீா்த்த அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானமும், பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, வளையல்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
விழாவில், சேவூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.