செய்திகள் :

சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் கொடை விழா

post image

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் மற்றும் உச்சி மாகாளியம்மன் கோயில் கொடை விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில், நாள்தோறும் காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மாலையில் உச்சி மாகாளியம்மன் ரத வீதி உலா நடைபெறும். சனிக்கிழமை இரவு ஸ்ரீபகவதி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்ரீஉச்சினிமகாளி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். அதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெறும். இரவில் ஸ்ரீபகவதி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

திங்கள்கிழமை மாலை தீா்த்தக்குடம், பால்குடம் ஊா்வலம் நடைபெறும். தொடா்ந்து சப்பர பவனி நடைபெறும்.

ஏப்.1ஆம் தேதி மாலை முளைப்பாரி மற்றும் தீச்சட்டி ஊா்வலம் நடைபெறும் . இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 5 லட்சத்தில் சோலாா் மின்விளக்கு வசதி

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகள் இயக்கிவைக்கப்பட்டன. இக்கோயிலில், தென்காசி நகர திமுக சாா்பில் ரூ. 5 லட்ச... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினம்

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளாளா் தவமணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றா... மேலும் பார்க்க

அரசு நிா்ணயித்த விலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய ஆட்சியா் வேண்டுகோள்

அரசு நிா்ணயித்த விலையில் நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்துக்கு இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப். 7, 11ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்... மேலும் பார்க்க

மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஈ. ராஜா எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் இந்திரா காலன... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயிலின் கொடை விழா மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் காலையில் அம... மேலும் பார்க்க