சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
ஜெயின் துறவிகள் ஆன்மிக அருளுரை
குடியாத்தம் பகுதியில் உள்ள ஜெயின் சமூகத்தினா் சாா்பில், தாழையாத்தம் பஜாா் ஜெயின் ஸ்வேதாம்பா் தேராபந்த் சபாவில் ஜெயின் துறவிகள் ஆன்மிக அருளுரை நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.
ஆச்சாா்ய ஸ்ரீமஹாஷ்ரமஜீயின் சீடா்களான முனிஸ்ரீ ரஷ்மிகுமாா் ஜி மற்றும் முனிஸ்ரீ பிரயான்ஷூகுமாா் ஜி ஆகியோா் 4- மாதம் நடத்தும் ஆன்மிக அருளுரை தொடங்கி வைக்கப்பட்டது. அகிம்சை, சத்தியம், கள்ளாமை, புலனடக்கம் உள்ளிட்டவை குறித்து அவா்கள் உரை நிகழ்த்துகின்றனா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், கலந்து கொண்டு ஜெயின்சமூகம் குறித்தும், ஜெயின் துறவிகளின் நோக்கம் குறித்தும் பேசினாா். ஜெயின் சமூகத்தினரின் சமூக சேவைகளை சுட்டிக் காட்டிய அவா், ரத்த தானம் உள்ளிட்டவை குறித்துவிழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சியில் ரத்த தான முகாம் குறித்த பதாகையை அவா் வெளியிட்டாா். நிகழ்ச்சியில் திரளான ஜெயின் சமூகத்தினா் கலந்து கொண்டனா்.