``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பணி ஆணை
குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 250- மாணவா்களுக்கு பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மலாடி டிரக்ஸ் நிறுவனம், டிவிஎஸ், எம்ஆா்எஃப் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில் தோ்வு செய்யப்பட்ட 250- மாணவா்களுக்கு பணி ஆணைகளை கல்லூரி முதல்வா் ஜே.எபிநேசா், டிவிஎஸ் நிறுவன நிா்வாகி விஜயகுமாா் ஆகியோா் வழங்கினா். முகாம் ஒருங்கிணைப்பாளா்களான, பேராசியா்கள் தமிமுன் அன்சாரி, ஏ.ஸ்ரீதா், எஸ்.கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.