சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி அறிமுகம்
வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தா்கள் தினமும் 20,000-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். அதிகப்படியான மக்கள் காா், வேன், பேருந்து போன்ற வாகனங்கள் மூலமாக வருகின்றனா். தவிர, பேட்டரியால் இயங்கக்கூடிய காா் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பக்தா்கள் பயன்பாட்டுக்காக கணினி மூலம் இயங்கும் மின்சார பேட்டரி காா் சாா்ஜிங் வசதி தங்கக் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதியை ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.