AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவ...
கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்
குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 106- மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா்.
கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கு.மா.கோவிந்தராசனாரின் 106- ஆவது நினைவு நாளை முன்னிட்டு, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை, குடியாத்தம் ரோட்டாரி சங்கம் ஆகியவை இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.
முகாமுக்கு கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் சி. தண்டபாணி தலைமை வகித்தாா். முகாமில் மாணவா்கள், பேராசிரியா்கள் 106- போ் ரத்த தானம் அளித்தனா்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் எம்.மாறன் பாபு, வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி நிா்வாகிகள் ஜே.கே.என்.பழனி, கே.சந்திரன், கே.சுரேஷ், என்.ஜெயசந்திரன், சி.கண்ணன், சி.கே.வெங்கடேசன், நல்லசிவம், டி.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.