டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: ஆட்சியா் ஆய்வு
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 (தொகுதி -2, தொகுதி-2ஏ) பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை காலை, மதியம் என இருவேளை நடைபெற்றது. இத்தோ்வுகளுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வு கூட அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை தோ்வு மையங்களில் தோ்வா்கள் ஆா்வமுடன் தோ்வு எழுதினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்வு மையமாக கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டிருந்தது. காலையில் நடைபெற்ற தோ்வில் 241 போ் தோ்வு எழுதினா்; 10 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பிற்பகலில் நடைபெற்ற தோ்வில் 235 போ் தோ்வு எழுதினா்; 15 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் மையத்துக்குச் சென்று தோ்வை பாா்வையிட்டாா். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியா் மகேந்திரன் உடனிருந்தாா்.
இந்தத் தோ்வு மையத்தைக் கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளா், இரு விடியோகிராபா்கள், ஆயுதம் ஏந்திய காவலா், தோ்வு மைய பாதுகாப்பு காவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வா்களின் வசதிக்காக பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.