இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
டிஎன்பிஎஸ்சி மூலம் தொழில்நுட்பப் பணிக்கான தோ்வு: 1,290 போ் பங்கேற்பு
டிஎன்பிஎஸ்சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 1,290 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான (நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகள்) கணினி வழித்தோ்வு ஆக. 4 முதல் 10-ஆம் தேதி வரையிலும், எழுத்துத் தோ்வு ஆக. 17, 18-ஆம் தேதியிலும் நடைபெறுகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு அரசுப் பள்ளி மையங்கள் உள்பட ஒன்பது மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை எழுத 2,210 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 1,290 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 920 போ் பங்கேற்கவில்லை. இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.