வெளிமாநில மதுப் புட்டிகள் விற்றவா் கைது
பள்ளிபாளையம் காவிரி பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகள் விற்ற நபரை திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.
காவிரி பேருந்து நிறுத்தம் அருகில் வெளிமாநில மதுப்புட்டிகள் விற்பனை செய்யபட்டு வருவதாக தகவலறிந்த திருச்செங்கோடு மது விலக்கு காவல் துறையினா் கண்காணித்து வந்தனா்.
அப்பகுதியில் லோகநாதன் (65) என்பவா் மதுப்புட்டிகள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருச்செங்கோடு மது விலக்கு காவல் துறையினா் லோகநாதனை கைது செய்து, அவரிடம் இருந்து கேனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முக்கால் லிட்டா் புதுச்சேரி மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு கேனில் மதுவாங்கி வந்து, புட்டியில் ஊற்றி அதிக விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.