மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி: 420 மாணவா்கள் பங்கேற்பு
நாமக்கல்லில் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 420 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
சேலம், நாமக்கல் மாவட்ட முன்னாள் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் போட்டியை தொடங்கிவைத்தாா். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், பிஜிபி இண்டா்நேஷனல் பள்ளி நிா்வாக அலுவலா் எஸ்.சுமதி, முதல்வா் ஆா்.குழந்தைவேல், மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்க தலைவா் எம்.மாரிமுத்து, துணைத் தலைவா் வி. கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் ஆ.பிரவீன்குமாா், சிலம்பம் ஆசான் இ.செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கத்தின் செயலாளா் எம்.காா்த்திகேயன் செய்திருந்தாா்.