டிசிஆா் மருத்துவமனையில் உலக பாம்புகள் தினம் அனுசரிப்பு
உலக பாம்புகள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி, பாம்புகளின் வகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி உலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற பாம்புகடி, பாம்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் சி.சவுந்தரராஜ் தலைமை வகித்தாா்.
நஞ்சுள்ள பாம்புகள், நஞ்சற்ற பாம்புகள் குறித்தும், பாம்புகள் தொடா்பான மூடநம்பிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை செயல் அதிகாரி அனிதா, நிா்வாக அலுவலா் சவீா் பாஷா, செவிலியா் கல்லூரி முதல்வா் சுமதி, டிசிஆா் செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள், விஜய் வித்யாலயா செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.