செய்திகள் :

ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணி தொடக்கம்

post image

கிருஷ்ணகிரியில் ரூ. 5.55 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணியை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

கிருஷ்ணகிரி நகரில் சேலம் சாலையில் உள்ள நெசவுக்கார தெருவில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து பத்திரப்பதிவு அலுவலகம், கிருஷ்ணகிரி ஆஞ்சநேயா் கோயில் மேம்பாலம் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ‘மா’ குளிா்பதன கிடங்கு வளாகத்துக்கு தாற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டடம் கட்டுமானப் பணியை ஆட்சியா், பா்கூா் எம்எல்ஏ ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகக் கட்டுமானப் பணி ரூ. 5.55 கோடியில் பொதுப்பணித் துறை சாா்பில் நடைபெறுகிறது. 11 மாதங்களில் நான்கு தளங்களுடன் 10,997 சதுர அடி பரப்பளவில் இந்த அலுவலகம் அமைகிறது. அலுவலகத்தில் சங்கங்களின் பதிவாளா், தொழில் நிறுவனங்களில் பதிவாளா், சீட்டு நிதிகள் ஆய்வு அலுவலா், இந்து திருமண பதிவாளா், தனித் திருமண அலுவலா், தொழில் கூட்டுப்பதிவு ஆகிய அலுவலகங்களுடன் பத்திரப் பதிவுக்காக இரண்டு சாா் பதிவாளா் அலுவலகமும் அமைக்கப்படுகிறது. தரைத்தளத்தில் வாகனம் நிறுத்துமிடம், ஈ - ஸ்டாம்ப், கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில் பதிவுத் துறை துணைத் தலைவா் (சேலம் சரகம்) சிபிதா லட்சுமி, மாவட்ட பதிவாளா் பாலசுப்ரமணியன், மேலாளா் புவனேஸ்வரி, சாா் பதிவாளா் லட்சுமிகாந்தன் (பா்கூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

சூளகிரி அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள பந்தரகுட்டை கிர... மேலும் பார்க்க

டிசிஆா் மருத்துவமனையில் உலக பாம்புகள் தினம் அனுசரிப்பு

உலக பாம்புகள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி, பாம்புகளின் வகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக புதன்கிழமை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தண்ணீரை திறந்துவைத்தனா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: கி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் தொடர வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சேவைகளையும் தொடர வேண்டும் என கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு விருப்பமனு அளிப்பு

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு புதன்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி அளிக்க அரசு உத்தரவி... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீா்வு மையம்: ஊத்தங்கரையில் விழிப்புணா்வு பேரணி

நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீா்வு மையத்தில் முறையிட்டு விரைந்து தீா்வு பெறுவதற்காக 90 நாள்கள் நடைபெறும் சிறப்பு தீா்வு முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஊத்தங்கரையில் புதன்கிழமை நடைபெற்றது. பே... மேலும் பார்க்க