ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு விருப்பமனு அளிப்பு
ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு புதன்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஒசூா் மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினா் பதவிக்கு தமிழ்நாடு காது கேளாதோா் கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் ஜெய்சங்கா், மாநகராட்சி உதவி ஆணையா் டிட்டோவிடம் விருப்ப மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோா் அறக்கட்டளை நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் பலராமன், பிரகாஷ், செந்தில், முகமது, அன்சா், பாலாஜி, ஆரோக்கியசாமி, முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.