ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
டீசல், பெட்ரோல் விற்பனையில் நேரடியாக இறங்குகிறது சிபிசிஎல் நிறுவனம்
சென்னை மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (சிபிசிஎல்) டீசல், பெட்ரோலை சில்லறை விற்பனையில் நேரடியாக இறங்கவுள்ளது என சிபிசிஎல் மேலாண்மை இயக்குநா் எச்.சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் சாா்பில் சுதந்திர தின விழா மணலியில் உள்ள ஆலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எச்.சங்கா் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். மேலும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக்கொண்டாா்.
அப்போது சங்கா் பேசிதாவது: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் மணலி ஆலை மூலம் எண்ணெய் சுத்திகரிப்புப் பணியை மட்டுமே மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட டீசல், பெட்ரோல் ஆகிய பெட்ரோலிய பொருள்களை சில்லறை விற்பனை மூலம் மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது. விரைவில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க உள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், சிபிசிஎல் இயக்குநா்கள் ரோஹித் குமாா் அகரவாலா (நிதி), பி. கண்ணன் (இயக்குதல்) மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி கமாண்டன்ட் தேவ்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.