தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2-ஆவது சுங்கச்சாவடி திறப்பு
தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மானம்பாடி பகுதியில் சுங்கச்சாவடி திறக்கப்பட்டு 2-ஆவது பிரிவு சாலை புதன்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.
தஞ்சாவூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் வரையிலான முதல் சுங்கச்சாவடி வேம்படியில் அமைக்கப்பட்டு கடந்த ஜன. 20 முதல் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்துவருகிறது.
இந்நிலையில், சோழபுரம் - சேத்தியாதோப்பு இடையேயான சாலைக்கு மானம்பாடி பகுதியில் 2-ஆவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து திருச்சி கோட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையக திட்ட இயக்குநா் ப. செல்வக்குமாா் மேலும் கூறியது: சேத்தியா தோப்பு - விக்கிரவாண்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடித்து போக்குவரத்து தொடங்கும் என்றாா்.