எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
தனியாா் பள்ளி பெண் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற தனியாா் பள்ளி பெண் ஊழியா் மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் அரசுக் கல்லூரி சாலை, கோலியனூரான் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி ராதா(40). விழுப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.
இவா் புதன்கிழமை காலை பள்ளிக்கு பணிக்கு சென்றபோது விழுப்புரம்- கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலம் அருகே மயங்கி கீழே விழுந்து விட்டாராம்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது ராதாஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்த ராதாவுக்கு இரு மகள்கள் உள்ளனா்.