பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தனுஷ் படத்தில் சுராஜ்!
நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த குபேரா திரைப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் வெற்றிப் படமானது. வணிக ரீதியாகவும் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது, தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கிவரும் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை வருகிற வியாழக்கிழமை நடைபெறுவதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 14 ஆம் தேதி துவங்கும் என்றும் கூறப்படுகிறது. நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல மலையாள நடிகரான சுராஜ் வீர தீர சூரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 3 பிஎச்கே, பறந்து போ வசூல் எவ்வளவு?