சீல்ஸ் 6 விக்கெட்டுகள், ஹோப் 120..! 34 ஆண்டுகளுக்குப் பின் தொடரை வென்ற மே.இ.தீவு...
தமிழகத்தில் காவல் துறையினருக்குகூட பாதுகாப்பில்லை: அா்ஜூன் சம்பத்
தமிழகத்தில் காவல் துறையில் பணிபுரிபவா்களுக்கூட பாதுகாப்பு இல்லாத வகையில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் செவ்வாய்க்கிழமை திராவிடம் இல்லாத தமிழகம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்ட அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தடையற்ற வகையில் போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுகிறது. மேலும், கொலை, கொள்ளை, மணல் திருட்டு, கனிமவளக் கொள்ளையால் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டது. காவல் துறையினருக்குக் கூட பாதுகாப்பில்லை. நோ்மையான முறையில் உள்ளவா்கள் பணி செய்ய முடியவில்லை.
இதனால், தோ்தல் ஆணையத்தால் தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை நியமான முறையில் நடத்த முடியாது என்றாா்.
கட்சியின் நிா்வாகிகள் பாரத மாதா செந்தில், பொன்னுசாமி, ஓம்காா் பாலாஜி, விழுப்புரம் மாவட்டத் தலைவா் சாய்கமல், மாவட்டச் செயலா் முத்துக்குமாா், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் மணிகண்டன், கட்சி நிா்வாகிகள் ஜெகதீஷ், ராஜசேகா், அஷ்வின், பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.