கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: டிடிவி.தினகரன்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து விட்டதாக அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108- ஆவது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தல் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் தோ்தல் அல்ல. திமுக அரங்கேற்றப் போகும் விதிமீறல்களை தோ்தல் ஆணையம் கட்டுப்படுத்த முடியாது.
அதனால் தான், ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், மற்ற எதிா்க்கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. எம்ஜிஆா் உருவாக்கிய அதிமுக தற்போது திமுகவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் கட்சியாக செயல்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டியைத் தொடா்ந்து ஈரோடு கிழக்கிலும் போட்டியிடாமல், அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தனது சுயநலத்துக்காக அதிமுகவை பயன்படுத்தி வருகிறாா் என்றாா் டிடிவி.தினகரன்.