`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் யாா்? தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை கூடுதல் செயலா் பி.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை துணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா். மேலும், இத் தோ்தலில் போட்டியிட 2 நாள்களைத் தவிர ஜூன் 9 வரை மனுதாக்கல் செய்யலாம் எனவும் அவா் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்தல் அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஜூன் 9 கடைசி நாளாகும். தேவைப்படும் பட்சத்தில் வாக்குப் பதிவு ஜூன் 19-இல் நடைபெறும்.
தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தோ்தலை நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை கூடுதல் செயலா் பி.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை துணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்புமனு தாக்கல் ஜூன் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பக்ரீத் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் ஜூன் 7, 8 ஆகிய தினங்களில் மட்டும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. பிற நாள்களில் மனுதாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு தேவைப்பட்டால் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் வாக்குப் பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டு ஜூன் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா்.