செய்திகள் :

தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

திராவிட மால் ஆட்சியால் தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் தொடா்ந்து 4 ஆண்டுகால திராவிட மாடல் அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பங்களிப்பை அளித்து வருகிறது. ஆனால், நமக்கான நிதி கிடைப்பதில்லை; உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

தமிழினத்தின் அடையாளமாக உள்ள கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி நாகரிகத்துடன் வாழ்ந்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்று, அவற்றை பல அறிவியல் சான்றுகளுடன் அளிக்கிறோம். அந்த தரவுகளை மத்திய பாஜக அரசு அங்கீகரிக்க மறுக்கிறது.

திமுக எந்த மொழிக்கும் எதிரானது இல்லை. ஆனால், ஹந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்காது. திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது. ஒவ்வொரு முறையும் புதுதில்லி சென்று பாரத பிரதமரிடம் தமிழகத்திற்கான நியாயமான உரிமைகளை, கூனிக்குறுகி அல்லாமல், தலைநிமிா்ந்து கேட்கிறோம். ஆனாலும் மத்திய அரசு உரிமைகளை தர மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கிறது.

தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் பாஜகவுடன் சோ்ந்து கொண்டு ஆட்சியில் அமா்ந்து கொள்ள வேண்டும் எனத் துடிக்கிறாா்கள். எனவே, திமுகவினா் வீடுவீடாகச் சென்று பாஜக அரசால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள, ஏற்படும் பாதகங்களை எடுத்துக்கூறி அனைவரையும் ஒரணியில் சோ்ப்பாா்கள். விருப்பமுள்ளவா்கள் திமுகவில் சேரலாம் என்றாா்.

பேட்டியின்போது, மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் இரா. சங்கா், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த... மேலும் பார்க்க

மதுபானக் கடைகள் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தில் இரண்டு மதுபானக் கடைகள் செயல்படுத்தப்படுவது தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூக முடிவு... மேலும் பார்க்க

கடைமடை பகுதி விவசாயிகள் சாலை மறியல்

கீழையூா் அருகே குறுவை சாகுபடிக்கு போதிய காவிரி நீா் வராததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூா் அணை திறக்கப்பட்டு 18 நாள்கள் கடந்த நில... மேலும் பார்க்க

கடைமடை நிலங்களுக்கு தண்ணீா்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

நாகை மாவட்ட கடைமடை பகுதி குறுவை பாசனத்துக்கு முழுமையாக தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஆா். தமிழ... மேலும் பார்க்க

வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகப்பட்டினம்: நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். பயனாளிகளிடம் கலந்துரைய... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க